முகக் கவசமில்லா எவரும் பொது போக்குவரத்தில் பயணஞ் செய்ய அனுமதிக்கக்கூடாது.-ஹட்டன் பொலிஸார்; உத்தரவு


ஹட்டன் கே.சுந்தரதலிங்கம்- 
ட்டன் பகுதியில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள், முகக்கவசமில்லாத எவரையும் பொது போககுவரத்து சேவையில் அனுமதிக்கக் கூடாது. என ஹட்டன் பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் P.று.ளு.டீ. பலிபான இன்று (12) திகதி ஹட்டன் பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகள் மற்றும் நடத்துனகளை வலியுறுத்தினார்.
ஹட்டன் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலினை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொது போக்குவரத்து சேவையில் இந்நடவடிக்கைகள் முறையாக நடைபெறாமை காரணமாக இந்த நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது பஸ்ஸில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.சமூக இடைவெளிகள் பேணப்பட்டிருக்க வேண்டும்.அளவுக்கு அதிமான பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது.ஆசனத்தில் ஒருவர் மாத்திரமே அமர்;ந்திருக்க வேண்டும்.பஸ்ஸினுள் தொற்று நீக்கி உபயோகிக்கப்பட வேண்டும்.பஸ்ஸினை சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன் பஸ்ஸினை முழுமையாக தொற்று நீக்கம் செய்ய வேண்டும.; போன்ற விடயங்கள் இதன் போது வலியுறுத்தப்பட்டன.
இதே வேளை நேற்று(11) திகதி ஊரடங்கு சட்டம் நீக்கியதன் பின் திறக்கப்பட்டிருந்த சகல உணவகங்களும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களுக்கமைய இன்றைய தினம் மூடப்பட்டிருந்தன.
அத்தோடு நடைபாதை விற்பனையில் ஈடுபட்டுள்ள வரத்தகர்கள் மற்றும் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய செயப்படுமாறும் இங்கு வலியுறுத்தப்பட்டன.
பொது மக்கள் வழமை போல் தங்களுக்கு தேவையான வற்றை வழமை போல் கொள்வனவு செய்வதனையும்,ஏனையோர் தங்களுடைய கடமைகளில் வழமை போல் ஈடுபடுவதனையும் காணக்கூடியதாக இருந்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -