சமூக சேவகருக்கு அச்சுறுத்தல்-பொலிஸிலும் முறைப்பாடு


பாறுக் ஷிஹான்-
ல்முனைப் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இளைஞரான ஜெ.சி கிசாந்தன் என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று (3) கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த சமூக சேவைகள் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டில் இரண்டு ஒவ்வொரு அரசியல் கட்சியில் சேர்ந்து இயங்கும் நபர்களினால் தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் தான் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ் அச்சுறுத்தல் சம்பவம் போலி முகநூல் ஒன்றினை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
அச்சுறுத்தலுக்குள்ளான நபர்அண்மைக்காலமாக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வருகிற மக்களுக்காக நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -