கொரோனா பரவ கூடிய வழிகளுக்கு தடை போட்டு இருக்கின்றோம் என்பதில் எமக்கு நிச்சயம் திருப்தி உள்ளது. அந்த வகையில்தான் வெளியிடங்களில் இருந்து மர கறிகள், இறைச்சிகள், மீன்கள் போன்றவை கொண்டு வரப்பட்டு விற்கப்படுவதற்கு தடைகள், மட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளன என காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காரைதீவு பிரதேச செயலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்தித்து பேசிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எமது பிரதேசத்துக்கான கொரோனா கண்காணிப்பு குழுவின் தலைவராக நானே இருக்கின்றேன். மிகவும் சிறப்பான முறையில் எமது பிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் திறம்பட முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காரைதீவை அண்டி உள்ள பிரதேசங்கள் பலவற்றுடன் ஒப்பிடுகின்றபோது எமது நடவடிக்கைகள் முன்மாதிரியானவையாக உள்ளன.
கொரோனா பரவ கூடிய வழிகளுக்கு தடை போட்டு இருக்கின்றோம் என்பதில் எமக்கு நிச்சயம் திருப்தி உள்ளது. அந்த வகையில்தான் வெளியிடங்களில் இருந்து மர கறிகள், இறைச்சிகள், மீன்கள் போன்றவை கொண்டு வரப்பட்டு விற்கப்படுவதற்கு தடைகள், மட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளன. அதே போல எமது பிரதேச செயலகம் உள்ளடங்கலான அலுவலகங்கள் பலவற்றுக்கும் கிரமமாக தொற்று நீக்கிகள் விசிறப்படுவதை நான் நன்கு அறிவேன். எமது சுகாதார, வைத்திய துறையினரின் சேவைகளை குறைத்து மதிப்பிட முடியாது. காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் திறம்பட சிறப்பாக நடைபெற்ற வண்ணம் உள்ளன, இதற்காக சுகாதார மற்றும் வைத்திய துறை சார்ந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்
ஆனால் எமது காரைதீவு பிரதேசத்துக்கான சுகாதார வைத்திய அதிகாரி, காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஆகியோர் வேண்டும் என்று இலக்கு வைக்கப்படுகின்றனரா? என்கிற சந்தேகம் அண்மையில் இடம்பெற்ற காரைதீவு பிரதேச சபை அமர்வை தொடர்ந்து எழுந்து உள்ளது. அனைத்து தரப்பினரும், ஒருமித்து, ஒன்றித்து பயணித்து கொரோனாவை வெல்ல வேண்டிய தருணம் இது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்றார்.