காத்தான்குடி தளவைத்தியசாலையில் இயங்கிவரும் கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தின் பாவனைக்கு மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கிராம அமைப்பினரால் கொள்வணவு செய்யப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தற்காப்பு உபகரணங்கள் இன்று (01) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவினால் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் எம். அச்சுதனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் பிரித்தானியா நாட்டில் வசிக்கும் அங்கத்தவர்களால் அண்பளிப்பு செய்யப்பட்ட நிதியில் இந்த உபகரணங்கள் கொள்வணவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருக்கின்றபோதும் கொழும்பிலுள்ள தேசிய கிரிகட் வீரர்களான சங்ககார, முத்தையா முரலிதரன், மகில ஜயவர்தன ஆகிரோரது நற்குண முன்னேற்ற அமைப்பின் உதவியுடனும், இரானுவப்படை மற்றும் பொலிசாரின் ஒத்துளைப்புடனுமே இப்பொருட்கள் மட்டக்களப்பிற்கு தருவிக்கப்பட்டுள்ள்தாக விளையாட்டுக் கிராமத்தின் பொருளாளர் எஸ். ரஞ்சன் தெரிவித்தார்.
கோட்டமுனை விளையாட்க் கிராம நிருவாகிகள் தாமாக முன்வந்து இந்த கொரோனா சிகிச்சை உபகரணங்களான தற்காப்பு அங்கிகள், செயற்கை சுவாசக் கருவி, தொற்று நீக்கி திரவங்கள், பாதுகாப்பு முகக் கண்ணாடிகள் உட்பட பல சிகிச்சைக்குத் தேவையான பொருட்களையும் அன்பளிப்புச் செய்தனர். இவ்வளையாட்டுக் கிராமத்தின் நிருவாகத் தலைவர் ஈ. சிவனாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், வைத்திய அதிகாரி நவலோஜிதன், விளையாட்டுக் கிராமத்தின் செயலாளரும் மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எஸ். அருன்மொழி, விளையாட்டுக் கிராமத்தின் பொருளாளரும் மதுவரிலாகா மட்டக்களப்பு அத்தியட்சகர் எஸ். ரஞ்சன், இரானுவப் படை உயர்அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.
இந்த அன்பளிப்பைச் செய்துள்ள விளையட்டுக் கிராமம் 2017ல் கோட்டமுனை விளையாட்டுக் கழக உறுப்பினர்களால் சமுக, கல்வி, விளையாட்டுத் திறன் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் இதன் பிரதான திட்டமாக வெளிநாடுகளில் வசிக்கும் தமது கழக உறுப்பினர்களின் அன்பளிப்பில் மட்டக்களப்பு திராய்மடுப் பகுதியில் சர்வதேச நியமங்களின் அடிப்படையிலான தேசிய புத்தரைக் கிரிக்கட் மைதானமொன்று சுமார் 56 கோடி ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு தற்போது இதன் நிர்மணப்பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.