எமது உரிமைகளும் தேவைகளும் நிறைவேற புனித "லைலத்துல் கத்ர்" இரவில் துஆ இறைஞ்சிப் பிரார்த்திப்போம்- பைஸர் முஸ்தபா வேண்டுகோள்


மினுவாங்கொடை நிருபர்-
துஆப்பிரார்த்தனையே முஸ்லிம்களின் சிறந்த ஆயுதம். அந்த ஆயுதத்தைக் கொண்டு புனித "லைலத்துல் கத்ர்" இரவில் எல்லாம் வல்ல இறைவனிடம் எமது உரிமைகளுக்காகவும் எமது தேவைகளுக்காகவும் கையேந்தி இறைஞ்சிவோம் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, அனைத்து முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
எமது உரிமைகளையும் தேவைகளையும் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்கு, புனித ரமழான் மாதம் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
இம்முறை பல இன்னல்களுக்கும், வேதனைகளுக்கும் மத்தியில் புனித ரமழானைச் சந்தித்துள்ளோம். இதில், புனித "லைலத்துல் கத்ர்" இரவை அடையவுள்ள நிலையில், அந்த இரவில் எமது உரிமைகளையும், தேவைகளையும் இறைவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்கு எமது "துஆ" எனும் ஆயுதத்தை இயலுமானவரை அதிகம் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
"லைலத்துல் கத்ர்" இரவு என்பது, ஆயிரம் மாதங்களைவிடவும் சிறந்தது. இதில் இறைவனின் அருள் உலகிற்கு பன்மடங்கு இறங்குகிறது. இதனால்தான், இவ்விரவில் இரவு முதல் அதிகாலை வரை பல்வேறு வணக்க வழிபாடுகளிலும் முஸ்லிம்கள் ஈடுபடுகின்றார்கள். குறிப்பாக, துஆவை ஒரு சிறந்த ஆயுதமாக அமைத்துக் கொண்டு, இறைவனிடம் அதிகம் அதிகமாக இறைஞ்சுகின்றார்கள்.
நிம்மதி, சாந்தி, சமாதானம், அமைதி என்பன அதிகாலை வரை இருப்பதால், எமது துஆக்கள் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்படுவதைத் தவிர, ஒருபோதும் அது தட்டப்படுவதில்லை. எனவேதான், தெளபா, துஆ ஆகியவற்றிட்கு இவ்விரவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதைப் பார்க்கின்றோம்.
எமது துஆக்களில், எமது உரிமைகள், எமது தேவைகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது போல், எமது நாட்டையும், நாட்டு மக்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும் துஆ இறைஞ்ச வேண்டும். அத்துடன், நாட்டுத் தலைவர்களின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் மென்மேலும் வளர வேண்டும், முஸ்லிம்கள் தொடர்பாக வீணாகப் பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் சந்தேகங்கள் ஒழிய வேண்டும், முஸ்லிம்களும் இந்நாட்டில் சுய மரியாதையோடு தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்றும் பிரார்த்திக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -