கல்முனை மாநகர சபை மேயருக்கு அப்துல் ரசாக் பகிரங்க மடல் -


சப்னி-
ஸ்ஸலாமு அலைக்கும்
கௌரவ மேயர் அவர்களுக்கு.....

மாட்டுஅறுக்கும் தொழுவம் சம்பந்தமாக....

எமது மாநகர சபைக்கு உட்பட்ட ஊர் மருதமுனை, நட்பட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் உள்ளஇறைச்சிக் கடை உரிமையாளர்களிடம் தனியார் மாட்டுத்தொழுவ உரிமையாளர்கள் ஒரு மாடு அறுப்பதற்காக ரூபாய்1500 என்றும் ரூபா 1200 என்றும் அறவீடு செய்கின்றார்கள்.

இதனை நாம் கண்டும், கேட்டும்  உங்களிடம் சொல்லாமலும் இருக்க முடியாது.
உதாரணமாக ஒரு ஊரில் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு இறைச்சிக் கடை உரிமையாளர் 5 தொடக்கம் 10 மாடுகளை அறுக்கின்றார்கள். குறிப்பாக சாய்ந்தமருது தனியார் மாட்டுத் தொழுவத்தில் குறைந்தது 75 தொடக்கம் 100 மாடுகளும் இறைச்சிக்காக அறுக்கின்றார்கள். அவர்களது சராசரி வருமானம் 1500 × 75 = 112500)

நற்பிட்டிமுனை தனியார் மாட்டு தொடழுவத்தில் 50 தொடக்கம் 75 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கின்றார்கள். ( சராசரி வருமானம் 50 × 1200 = 60000 )
எனவே இது இவ்வாறு இருக்க கல்முனையில் மாட்டுத்தொழுவம் இருந்த ஊருக்கு இதுவரையில் மாநகர சபையினால்தொழுவம் கட்டும் ஏற்பாடும் இல்லை. தொழுவமும் இல்லை.

இதனால் கல்முனை இறைச்சிக் கடை உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து,
ஏற்றி இறக்கும் போக்குவரத்து செலவும் அதிகமாக உள்ளது.
அத்துடன் இதில் பல கமிஷன் பங்கீடுகள் உள்ளதாகவும் அறிகின்றேன்.
இது அநியாயம் கொண்ட செயற்பாடாக நான் பார்க்கின்றேன்.

எனவே கெளரவ மேயர் அவர்களே!

இதற்கான உடனடி தீர்வாக இந்த தனியார் மாட்டுத் தொழுவ உரிமையாளர்களுக்கு ஒரு மாடு அறுப்பதற்கு ரூபா 500 தொடக்கம் ரூபா 700 மட்டும் அறவிட எழுத்து மூல உத்தரவை பிறப்பிக்குமாறு இறைச்சிக் கடை உரிமையாளர்கள்சார்பாக உங்களை தாழ்மையுடம் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி.

கல்முனை- ஜவாத்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்.
தேசிய கொள்கைபரப்பு செயலாளர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -