கிண்ணியாவும்- பாடசாலைகளில் இஸ்லாம் பாடமும்



திகமான முஸ்லீம்கள்(97%) கொண்ட பிரதேசமாக கிண்ணியா உள்ளது. இதன்
பல்வேறு துறைசார்்விமர்சனங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு,,, கலாசரசாரத்தை அடிப்படையாக் கொண்ட “இஸ்லாம் பாடம்” சாதாரண மற்றும் உயர்தர வகுப்புக்களில் இருந்து அழிந்து்போவது துரதிஷ்டவசமாகும்.

ஒரு சிறு வரலாற்று சான்றுடன் ஆராய்வோம்.2000ம் ஆண்டுக்குப் முன்னர் நமது ஊரில் பல தமிழ்மாணவர்கள் பாடசாலைகளில் கற்பித்தனர். இவர்கள் இஸ்லாம் பாடத்திலே அதிக ஆர்வம் காட்டுவர்.1989ம் ஆண்டு Dilan என்ற தமிழ்மாணவன் மத்திய கல்லூரியில் GCE(O/L) பரீட்சையில் அதிஉச்ச பெறுபேறான “D” எடுத்த வரலாறு உண்டு.

பின்னர் கிண்ணியாவில் அதிகமான இஸ்லாம் பாடத்திற்கான ஆசிரியர்கள் மிக அர்ப்பணத்துடன் பல பாடசாளைகளில் கற்பித்தனர். ஊரில் மார்க்க விடயங்களில் குளறுபடி இருக்கவில்லை.மக்களும் கலாச்சார விழுமியங்களை அதிகம் கடைப்பிடித்தனர்.

அத்துடன் சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் அதிகமான சாதகமான பெறுபேற்றை எடுப்பதற்கு மாணவர்களும் இந்தப் பாடத்தில் ஆர்வம் காட்டினர்.

காலம் அதனது நேரத்தில் தனக்கு உரிய பாணியில் சரியாகவே நகர்ந்தது. ஆனால் ஊரில் நாளுக்குநாள்்மனிதநேயம் விலைபோக ஆரம்பித்தது. இது ஊரின் சகல துறைகளிலும் கொரோனா தொற்றுக்கு ஆட்கொண்டது.

அந்த பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக:

•மார்க்கத்தில் குளறுபடி!
•தெருவிற்கு ஒரு அரசியல்வாதி!
•கலாச்சாரத்தை மறந்த சமூகம்!
•ஆசிரியர்களை மதிக்காத மாணவர்கள்
பாடசாளையில்!
•மகனின் பாடசாளையுடன் தொடர்பற்ற பெற்றோர்கள்!
•கல்வியை வீதியில் டியுசன் என்ற போர்வையில் வியாபாரமாக்கிய ஆசிரியர்கள்!
•தராதரம் இல்லாதவர்களை ஆசிரியர்களாக்கி, பாடசாளையை அரசியல் மேடையாக்கிய தலமைகள!

என சமூகத்தில் அதிகதான தொற்றுக் கிருமிகள் புற்றுநோயாக அதிகரித்துவிட்டது. இதனால் இன்று

•மார்க்கத்தில் பெயரளவில் முஸ்லீம் அடையாளம் மட்டும் உள்ளது.
•பள்ளிவாசல்கள் பரிபாலனம்,நிர்வாகம் மற்றும் தொழுபவர்கள் இல்லாமல் சீரழிகிறது.
•சகல சீரழிவிற்கும் பத்வா வழங்குகின்ற ஆயிரம் உலமாக்கள்.
•உலமாக்களை கேவலப்படுத்தும் சமூகம்
•கட்சிகளும், மார்க்க குழுக்களும் தினம் தினம் புதிதாக முளைக்கிறது.
•வட்ட,இலஞ்சம்,போதை,குடி,விபச்சாரம் என்பது அதிகார வர்க்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது.
•இஸ்லாம் பாடம் எடுப்பது அருவெறுப்பாக கருதும் மாணவர்கள்.

இந்த சூழலில் கடந்த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில் ஒப்பீட்டளவில் சகல பாடங்களையும் வட இஸ்லாம் பாடத்திலே அதிகமானவர்கள் (300) தோல்விகண்டுள்ளனர.

இதற்கு ஆசிரியர் சமூகத்தை ,குறிப்பாக சில ஆசிரியர்கள் மீது விரல்் நீட்டுவது கவலைக்குரியதாகும். இந்த விடயத்தில் முழுப் பொறுப்பும் உள்ளவர்கள் தங்களின் சுயரூபத்தை ஆசிரியர்கள் மீது சுமத்திவிட்டு சமூக சீர்சிருத்தவாதிகளாக முகநூளில் நாட்டாமை செய்கின்றனர்.

உண்மையில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மார்க்கத்தில் ஈடுபாடு இல்லாத போது இஸ்லாம் பாடத்தில் எவ்வாறு சித்தியடைய முடியும். ஆங்கிலம், தொழிநுட்ப மற்றும் கணிதப் பாடத்திற்கு வழங்கும் முக்கியத்துவம் , மேலதிக வகுப்புகளுக்கான பணம் என சமூகத்தில் போட்டிமனநிலை வேரூண்டி உள்ளது.இஸ்லாம் பாடம் இன்று 2000ம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களப்பாடம் “விருப்பத் தெரிவு” பாடமாக இருந்ததைவிட தரக்குறைவாகி உள்ளது.

ஆகவே சமூகத்தில் சீரழிவை குறைகாணும் அரசியல் நாட்டாமைகள்,உலமாக்கள்,பெற்றோர்கள்,சமூக நலன்விரும்புகள் இதுவிடயத்தில்்அதிக கவனம்்செலுத்த வேண்டும்.

நமது ஊர் முஸ்லீம்கள் அதிகமான பிரதேசம் மற்றும் நாம் முஸ்லீம்கள் என்பதற்கு கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் கோபுரங்கள் மட்டுமே ஆதரமாக இருக்கும். அல்பேனியா என்ற நாடு அதிகமான முஸ்லீம்கள்(78%) வாழ்கின்ற நாடு. ்அங்கு அதிகமான பள்ளிவாசல்களும் உண்டு. ஆனால் இஸ்லாத்தில் (13%) மிக்க் குறைவானவர்களே உள்ளனர்.

இறைச்சிக் கடைகளில் தினம் மணித்தியால நேரமாக ஆயிரம் பெற்றோர்கள் வரிசையில் நிற்கின்றனர்.பொற்றோர் சங்க கூட்டத்தில் 5நபர்களைக் காண்பது கூட சாதனையாக உள்ளது.பள்ளியில் தொழுகை இடம்பெறுகின்ற போது வெளியே அரசியல்பேசிகின்ற கூட்டம் அதிகமாக உள்ளது.

முகநூளில் கல்வியை குறைகாணும் அதிகமானவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு டியுசன் வகுப்புக்களை ஊக்குவிப்பவர்கள். அதேநேரம் பிள்ளைகளை ஊருக்கு வெளியே கல்விகற்க அனுப்புவதோடு, தாங்களும் குடும்பத்துடன் குடிபோகின்றனர்.

தனது பிள்ளையை 5ம் ஆண்டு பரிட்சைவரை மத்ஹபுக்கு அனுப்பினால் மட்டும் போதும் என்ற மனபாங்கு உருவாகி உள்ளது. ஆகவே இஸ்லாம் பாடமும் , முஸ்லீமாக வளர்ப்பதும் 5ம் ஆண்டுடன் முழுமை பெறுகின்றது.

மார்க்கத்தில் ஊரில் ஆயிரம் குளறுபடி. அரசியலை விட மார்க்கத்தில் உள்ள பிரிவுகள் ஊரில் நம்மை மார்க்கத்தை விட்டு தூரமாக்கி உள்ளது.இதனால் மாணவ சமூகம் மார்க்க கல்வியை கற்பதிலும் ஆர்வம் குறைவாக உள்ளனர்.

இஸ்லாம் பாடத்தை கற்பதைவிட ஏனைய பாடங்களை கற்பதில் எதிர்காலம் உள்ளது என்ற அந்நியக் கலாச்சார மூலச்சலவைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இதனால் அதிகமானவர்கள் மார்க்கத்திலும் இல்லை, வாழ்க்கையில் முன்னேற்றமும் இல்லாத வீதியில் நிற்கின்றனர்.

உண்மையான முஃமீனாக வாழ்பவனுக்கை பாடசாலையில் இஸ்லாம் பாடத்தை போதிக்காமலே சித்தியடைய முடியும்.இதற்கு இஸ்லாம் பாட ஆசானை குறைகூறுவது , நமது கண்ணை நாமே குத்துவதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -