மொட்டு நான்கு ஆசனங்கள் பெறுவது உறுதி; இன பேதம் கடந்து றிஸ்லி முஸ்தபாவுக்கும் வாக்களியுங்கள்; விமலவீர திசாநாயக்க!


நான்கு ஆசனங்கள் பெறுவது உறுதி; இன பேதம் கடந்து றிஸ்லி முஸ்தபாவுக்கும் வாக்களியுங்கள்; விமலவீர திசாநாயக்க!

பொது ஜன பெரமுன கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 4 ஆசனங்களை நிச்சயம் பெறும். இங்கு வருகை தந்திருக்கின்ற 4பேரும் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதற்கேற்ற வகையில் செயற்படுங்கள்.

நான் உட்பட வேட்பாளர் ஜினசேன, வீரசிங்க அத்துடன் எங்களுடைய சக முஸ்லிம் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களுக்கும் வாக்களிப்போம் இவர்கள்தான் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என அம்பாரை மாவட்ட முதன்மை வேட்பாளர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொது ஜன பெரமுன கட்சியின் தேர்தல் நடவடிக்கை தொடர்பான விஷேட கூட்டம் இன்று அம்பாரை பிரதேச ஆதரவாளர்களை ஒன்றினைத்து இடம்பெற்றது.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே, பஸீல் ராஜபக்ஷவின் செயலாளர் திரு ஸாலிய உட்பட பொதுஜன பெரமுன இணைப்பாளர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு விமலவீர திஸாநாயக்கா தொடர்ந்து உரையாற்றுகையில்;

பொதுஜன பெரமுன கட்சியை வளர்ப்பதில் மிகப்பெரிய பங்கு இங்கு வருகை தந்திருகின்ற நான்கு வேட்பாளர்களுக்கும் இருக்கின்றது. நாங்கள் இன பேதங்கள் கடந்து வாக்களிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

முஸ்லிம் சமூகத்தின் சார்பாக களமிறங்கியுள்ள மயோன் முஸ்தபாவின் புதல்வர் இளம் வேட்பாளர் றிஸ்லி முஸ்லிம் முஸ்தபாவுக்கும் வாக்களியுங்கள். நாம் நான்கு பேரும் ஒன்றாக பாராளுமன்றம் செல்வோம். எமது கட்சி அதற்கான வேலைத்திட்டங்களை செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -