பட்டதாரி பயிலுநர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்க அரசாங்த்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்


எம்.ஏ.முகமட்-
ட்டதாரிப் பயிலுநர் நியமனம் பெற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும் என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் வலியுறுத்தியுள்ளார்.

தனியார்த் துறையில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கானோர் அரசின் நியமனத்தை நம்பி வேலையற்றவர்களாக வீடுகளில் முடங்கிப்போயுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது
பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்துவிட்டு அரசாங்க வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து அது கிடைக்காத நிலையில் தனியார்த் துறையில் இணைந்தவர்கள் இன்று அரச வேலையும் இன்றி தனியார் வேலையும் இன்றி அல்லற்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட தொடர் ஊரடங்கு உத்தரவு பட்டதாரி பயிலுநர்கள் வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.

பட்டதாரி பயிலுநர் என்ற அடிப்படையில் அரச துறைக்குள் நுழைந்தவர்கள் தாம் முன்பு பணியாற்றிய தனியார்த்துறை வேலைவாய்ப்பையும் இழந்து அரச வேலை வாய்ப்பும் இன்றிச் சிரமப்படுகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் அரச நியமனம் கிடைக்கப்பெற்ற போதிலும் எந்தவொரு கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் சுமார் இரண்டு மாதங்களாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

பட்டதாரி பயிலுநர்களின் அவலநிலை குறித்து அரச தரப்போ எதிர்த்தரப்போ உரிய கரிசனை காட்டவில்லை.

பல்வேறுபட்ட போராட்டங்கள் , நீண்டகால காத்திருப்பிற்குப் பின்னர் கிடைத்த அரச நியமனத்தால் தனியார்த்துறை வேலை வாய்ப்பையும் பறிகொடுத்தது தான் பட்டதாரி பயிலுநர்களுக்குக் கிடைத்த சன்மானம்.
பட்டதாரி பயிலுநர் நியமனத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டை சுட்டிக்காட்டி அரசு தப்பித்துக்கொள்ள முயற்சித்தாலும் அதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசி உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களாக சுமார் 45 ஆயிரம் பட்டதாரி பயிலுநர்கள் எந்தவொரு கொடுப்பனவுகளும் இன்றி நிர்க்கதியாகியுள்ளனர் என்பதை அரசு விளங்கப்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டைக் காரணம் காட்டி தப்பித்துக்கொள்ள எண்ணக்கூடாது.

ஏனைய அரச ஊழியர்களுக்கு எவ்வாறு மாதாந்தச் சம்பளம் வழங்கப்படுகிறதோ அதேபோன்று பட்டதாரிப் பயிலுநர்களுக்கும் ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -