கொரோனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் குழந்தைகளை தாக்கும் புதிய தொற்று!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
மெரிக்காவில் கொரோனா வைரஸூக்கே விடிவு கிடைக்காத நிலையில் சிறு குழந்தைகளை மர்ம நோய் தாக்கி வருகிறது. 2 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு வகையான மர்ம நோய் பரவுகிறது. ஒருவகை அழற்சியால் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்த் தொற்று கவாசாகி ( Kawasaki ) என்ற நோய் அறிகுறியுடன் ஒத்திருப்பதாக வைத்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, சொறி, வீங்கிய நிணநீர் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டிருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். இந்தஅறிகுறிகள் தென்பட்டால் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் வந்து அனுமதிக்குமாறு நியூயோர்க் நகர மேயர் Bill de Blasio தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் அறிகுறி தெரிந்தவுடன் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் நியூயோர்க் நகர சுகாதார ஆணையாளர் Oxiris Barbot தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -