சட்டவிரோதமாக கல்முனை கண்ணகி கோவில் வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் சிரமம்


பாறுக் ஷிஹான்-
ட்டவிரோதமாக கல்முனை கண்ணகி கோவில் வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
அண்மைக்காலமாக குறித்த வீதியின் அருகில் உள்ள வெற்று காணியில் இரவு இனம்தெரியாத நபர்களால் ஆலயச் சூழலில் பெருமளவு கழிவுகள் வீசப்பட்டுள்ளன.இதனால் குறித்த காணியில் குப்பைகள் தேங்கி காணப்படுவதுடன் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் சீராக கல்முனை மாநகர சபை திண்மக்கழிவுகளை அகற்றி வந்த போதிலும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஒருவரே தடையாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
குறித்த மாநகர சபை உறுப்பினர் அப்பகுதி மக்களுக்கு கல்முனை மாநகர சபையினால் திண்மக்கழிவிற்கென அறவிடப்படும் ரூபா 50 ஐ வழங்க வேண்டாம் என தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு கல்முனை மாநகரசபையினால் கழிவுகள் முறையாக தற்போது அகற்றப்பட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த மாநகர சபை உறுப்பினர் தொடர்பில் கடந்த பொதுக்கூட்ட தொடரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை பகுதியில் மாநகர சபையினர் குறித்த பகுதிக்கு திண்மக்கழிவுகளை அகற்றுவதற்காக சென்றிருந்தனர்.அங்கு சென்ற குறித்த மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் ஆகியோர் குறித்த திண்மக்கழிவுகளை அகற்ற சென்ற ஊழியர்களை மக்களுக்கு இடையூறு இன்றி திண்மக்கழிவுகளை அகற்றுமாறு கூறியுள்ளனர்.

இதில் அவ்விடத்தில் நின்று நண்பர் என்ற அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கொடிஸ்வரன் தொலைபேசியில் என்னை(முதல்வர்) தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.இதில் திண்மக்கழிவு விடயத்தில் அறவிடப்படும் வரி தொடர்பில் சாதாரணமாக கேட்டறிந்து கொண்டு தொடர்பை துண்டித்து விட்டார்.

ஆனால் நடந்தது என்ன குறித்த மாநகர சபை உறுப்பினர் சில முகநூல் ஊடகங்களுக்கு திண்மக்கழிவிற்காக அறவிடப்படும் வரியினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று குறித்த வரியை செலுத்த தேவையில்லை என மக்களுக்கு தவறாக தகவலை பரப்பி உள்ளார்.

இதில் குறித்த மாநகர சபை உறுப்பினர் தனது அரசியலுக்காக எதையும் செய்யக்கூடிய ஒரு நபர்.கடந்த காலச் செயற்பாடுகள் இதை புடம்போட்டு காட்டுகின்றன.இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நட்பு ரீதியாக தொடர்பு கொண்டதை தனது அரசியலுக்காக குறித்த மாநகர சபை உறுப்பினர் பயன்படுத்தி உள்ளார்.இது ஏற்க கூடியது அல்ல.சம்பந்தப்பட்ட மாநகர சபை உறுப்பினரின் தொடர்பில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விலகிக்கொள்ள வேண்மும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.அவ்வாறு விலகுவதனால்; அவரது எதிர்கால அரசியலே சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியும் என்றார்.
குறித்த மாநகர சபை உறுப்பினர் இன நல்லுறவை சீரழிக்கின்ற நாசகாரச் செயல்களை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கடையே முறுகல் நிலைகளையே ஏற்படுத்தும். இவ்வாறான செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் அவர் தனது செயற்பாடுகளை மாற்ற முன்வர வேண்டும் என்றார்.

மேலும் இவரது செயலால் சிலர் சுயலாப அரசியல் நோக்கம் கொண்ட இத்தகைய விரும்பத்தகாத செயல்களை அரங்கேற்றுவதில் ஆர்வமாக உள்ளனர். இதே வேளை எமது தமிழ் மக்கள் இவ்விடயம் தொடர்பில் ஆத்திரமடைந்தவர்களாக காணப்படுகின்றனர். எமது மக்கள் நிதானமாகவும் பொறுமையுடனும் செயற்பட்டு இத்தகைய நாசகாரச் செயல்களை மேற்கொண்டவர்களை கண்டறிவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நாம் மாற்று இனத்தவர்களையோ மதத்தவர்களையோ இம்சிப்பதால் கண்ட பயன் எதுவுமில்லை. மாறாக ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு முட்டி மோதி இரத்த ஆறு ஓடுவதற்கே இத்தகைய செயல்கள் வழிசமைக்கும்.

எனவே தமிழ் முஸ்லிம் மக்கள் பின்னிப் பிணைந்து வாழும் கல்முனையின் இன நல்லுறவுக்கு வேட்டு வைப்பதற்கும் அதன் மூலம் அரசியல் சுயலாபம் தேடுவதற்கும் கங்கணம் கட்டியுள்ளவர்களுக்கு இடமளிக்காத வகையில் தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் சமயத் தலைவர்கள் புத்தி ஜீவிகள் தொழிற்பட வேண்டுமென்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -