மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடையாளம் காணப்பட்ட விசேட தேவையுடைய 10 சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக இடம்பெற்றத்தோடு அவர்களுக்கான சத்துணவுப் போதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு நேற்று (17) மூதூர் பகுதியில் இடம் பெற்றது. இதனை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெஸ்மி மற்றும் ,டாக்டர் சுபியான் மற்றும் முஸவ்மி ஆசிரியர் ஆகியோர்கள் இணைந்து We4U அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ் அசாதாரண சூழ்நிலையில் மூதூர் பிரதேசத்தில் வசித்துவருகின்ற விசேட தேவையுடைய பிள்ளைகளின் ஆரோக்கிய நிலை பாதிக்கப்பட்டு காணப்பட்ட வேலையில்
டயமன் விஷேட பாடசாலையின் அதிபர் செல்வி. அகீதா நசார் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க WE4U அமைப்பின் அனுசரணையில் குறித்த மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை அவர்களின் வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளப்பட்டதோடு, சத்துணவுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.