கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள்


பாறுக் ஷிஹான்-
மிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள் . தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை பகுதியில் புதன்கிழமை(13) முற்பகல் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

இன்று பல அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றது குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள் . தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள் ஆனால் இடையிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இ சுமந்திரன் போன்றோர்கள் ஊடகங்களுக்கு அவ்வப்போது விடுதலை புலிகளை ஏற்றுக்கொள்ள வில்லை என தெரிவித்துள்ளனர்.

சுமந்திரன் போன்றோர்களை இன்னும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என வடக்கு தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரன் போன்றவர்களுக்கு இம்முறை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று கொண்டு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் பாராளுமன்ற கதிரையை வெறுமனே அலங்கரித்து கொண்டு வருகின்ற சிங்கள தலைவர்களுடன் கைகோர்த்து ஏட்டிக்கு போட்டியாக தமிழ் மக்களை விலை பேசி வருகின்ற கூத்தாடிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சிறந்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கும் அதே வேளை சுமந்திரன் போன்ற கறுப்பாடுகளை களைந்தெறிய வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -