சிம் அட்டை விற்ற இரு முகவர்களின் குடும்பங்கள் கிண்ணியாவில் சுய தனிமை படுத்தல்

எம்.ஏ.முகமட்-

கிண்ணியா சுகாதார அலுவலகப் பிரிவைச் சேர்ந்த இரு நபர்கள் சிம் அட்டை விற்பனை செய்த முகவர்களின் குடும்பங்களை சுய தனிமைப் படுத்தலுக்கு உட் படுத்தியதாக சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜித் நேற்று தெரிவித்தார்.

கிண்ணியா றகுமானியா நகர் மற்றும் பைசல் நகரைச் சேர்ந்த குறித்த இரு குடும்பங்களை 14 நாட்களுக்கு சுய தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது..

குறித்த இரு நபர்களும் கடந்த புதன்கிழமை ( 21) திருமலை மங்கி பிரிஜ் கொரோனா சுய தனிமைப் படுத்தல் முகாமுக்கு சென்று சிம் அட்டைகளை விற்றுள்ளனர்.

குறித்த இரு குடும்பங்களை சுய தனிமை படுத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரின் உத்தரவுக்கமைய இந் நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது.

கொரோனா தொற்றுள்ளவர்களை சந்திப்பதை தவிர்க்த்து கொள்வதோடு ,சுகாதார முறைகளை பேணிக் கொள்ளுமாறு பொது மக்களுக்கு சுகாதார அதிகாரிகளினால் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -