அனைத்து சவால்களையும் முறியடிக்க மூவின மக்களும் இணைந்து செயற்படுவது அவசியம்


டாக்டர் டிலக் ராஜபக்ஸ தெரிவிப்பு

நாடு எதிர்கொள்ள நேர்ந்து உள்ள அனைத்து சவால்களையும் முறியடிக்க மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் ஆகும் என்று வியத்கம அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், வருகின்ற பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளருமான வைத்திய கலாநிதி டிலக் ராஜபக்ஸ தெரிவித்தார்.
பெரமுனவின் நிந்தவூர் செயற்பாட்டாளர் எம். எம். முபாசிரின் இல்லத்தில் செவ்வாய் மாலை விசேட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இதில் சக வேட்பாளரான சம்மாந்துறையை சேர்ந்த யூ. எல். அஸ்பர், அனைத்து கட்சிகள் ஒன்றியத்தின் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் அடங்கலான பேராளர்கள் கலந்து கொண்டனர்.

டிலக் ராஜபக்ஸ தொடர்ந்து பேசியவை வருமாறு

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் தீர்க்கதரிசனம், தூர நோக்கு, தெளிந்த சிந்தனை ஆகியவற்றுடன் கூடிய நடவடிக்கைகள் காரணமாக சுபீட்சம் நிறைந்த எதிர்கால இலங்கை கண் முன் தெரிகின்றது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் எவ்விதம் எமது தாய் நாடு ஏனைய உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றதோ அதே போல அனைத்து நல்ல விடயங்களுக்கும் முன்னுதாரணமாக விரைவில் மலரும் என்பதில் சந்தேகம் கிடையாது.
எத்தனையோ ஜனாதிபதிகள் வந்தார்கள். சென்றார்கள். ஆனால் எமது பாட்டன்கள் முதல் பேரன்கள் வரை இலங்கை அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடு என்றுதான் பல பல தசாப்த காலங்களாக தொடர்ச்சியாக படித்து வருகின்றோம். ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக உதயம் பெறுவதற்கான நல்ல சகுனங்கள் தென்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதியும், இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ ஆரம்பித்து வைத்த அபிவிருத்தியை நோக்கிய வேலை திட்டங்கள் அனைத்தையும் இந்நாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ தொடர்ந்து முன்னெடுத்து செல்வார். இவர்கள் இருவரும் இணைந்துதான் மூன்று தசாப்த காலமாக எமது நாட்டில் நிலவி வந்த கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தனர் என்பதையும் இவ்விடத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
எந்தவொரு யுத்தத்திலும் முதலில் சுட்டு வீழ்த்தப்படுகின்ற பொருளாக உண்மை உள்ளது. இனவாதம் பேசினால் இலகுவாக வாக்கு பெறலாம் என்கிற நப்பாசையுடன் குறுகிய சுய இலாப அரசியல்வாதிகள் உங்கள் முன்னிலைக்கு வருவார்கள். ஆயினும் அவர்களின் பருப்புகள் உங்களிடம் வேக போவது இல்லை. நாடு எதிர்கொள்ள நேர்ந்து உள்ள அனைத்து சவால்களையும் முறியடிக்க மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் ஆகும்.
நீண்ட மாதங்களுக்கு பின்னர் நாட்டில் இயல்பு சூழல் திரும்பி கொண்டிருக்கின்றது. சுகாதார மற்றும் வைத்திய துறையினரின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்கள் ஆகியவற்றுக்கு அமைய பொதுமக்கள் செயற்பட வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டு கொள்கின்றேன். கொரோனாவை முற்றாக இலங்கையில் இருந்து துரத்துகின்ற நாள் அண்மித்து விட்டது என்று உங்களை போலவே நானும் விசுவாசிக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -