அமைச்சர் தொண்டமானின் பூதவூடல் கொட்டகலையில் வைப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி சுகாதார ஏற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும். ஆராய்வு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
றைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் தலைவரும் அமைச்சரும் மலையக தலைவவமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவூடல்; நாளை 29 திகதி வௌன்டன் இல்லத்தில் வைக்கப்பட்டு அங்கிருந்து எதிர்வரும் 30 ம் திகதி அவர் அதிகமாக இருக்கும் இல்லமான கொட்டகலை காங்கிரஸ் தொழிநுட்ப நிறுவனத்தில் வைக்கப்படவுள்ளன.
அதற்கான ஏற்பாடுகளை சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைவாக கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இணைந்து கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்கேற்றவாறு பூதவுடுலுக்கு அஞ்சலி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கமைய இந்த செயப்பாடுகளை கொட்டகலை சுகாதார வைத்திய அதிகார பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் சௌந்தரராகவன் பார்வையிட்டு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
அமைச்சரின் பூதவூடல் எதிர்வரும் 31 ம் திகதி ஷஞாயிற்றுக்கிழமை நோர்வூட் மைதானததிற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளன.
குறித்த திகதி வரை அஞ்சலி செலுத்தவதற்காக வரும் தொழிலாளர்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கு சுகாதார பொறிமுறைக்கமைய வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார பிரிவினரும்,பாதுகாப்பு பிரிவினரும் திட்டமிட்டு வருகின்றனர்.இதே நேரம் சோகத்தினை வெளியிடும், வகையில் மலையகப்பகுதியில் நகரங்களில் வெள்ளைகொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளிலும் வாகனங்களிலும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.
இதே நேரம் சந்திகள் தோறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பந்தல் அமைத்து விளக்கேற்றி உருவப்படத்திற்கு இரவு பகலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -