சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் மின்சார கட்டணததை தள்ளுபடி செய்ய வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை



கொரோனா பாதிப்பு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக பொதுமக்கள் கடந்த முறை (பிப்ரவரியில்) செலுத்திய மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கையால 80 சதவீத மக்கள், இனி அடுத்து எடுக்க உள்ள அளவீட்டிற்கு பிறகு கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும். வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இது பெரும் சுமையாகும். தொழிசாலைகள் வணிக நிறுவனங்களுக்கான அளவீட்டை அவர்களே எடுத்து, மின்சார வாரியத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது போன்ற நடைமுறையை வீடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும் அல்லது இரண்டு மாதங்கள் விலையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். வேலைக்கு போகும் வாய்ப்பு இல்லா நிலையில் வயிற்றுக்கு அல்லல் படும் பாட்டை பார்க்கும் போது இத்தருணத்தில் இலவச மின் விநியோகம் உண்மையான பயனைத் தரும்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 31-க்குள் மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றிற்கு 3 மாதம் அவகாசம் அளித்து, அதாவது ஜூன் 30- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இது பெரும் சுமையாகும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், ஒப்பந்தத் தொழிலாளார்கள் உள்ளிட்ட பலர் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். வேலைக்கு போகும் வாய்ப்பு இல்லா நிலையில் வயிற்றுக்கு அல்லல் படும் பாட்டை பார்க்கும் போது இத்தருணத்தில் இலவச குடிநீர் விநியோகம் உண்மையான பயனைத் தரும். அதனால் 2020 ஆண்டிற்கான சொத்து வரியையும், ஆறு மாதங்களுக்கான குடிநீர் வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேற்கண்ட இரண்டு கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் சார்பாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ அனுப்பியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -