ரெலோ தலைவர் சிறி சபாரட்னத்திற்கு கட்சியினர் யாழில் அஞ்சலி


ன்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தன்னிகரில்லா ஒப்பற்ற தலைவர் சிறி சபாரத்தினம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட மே மாதம் ஆறாம் நாள் 1986 ஆம் ஆண்டில் நடந்த அந்த துன்பகரமான நிகழ்விலே படுகொலை செய்யப்பட்ட தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களும் 350 இருக்கும் மேற்பட்ட சக போராளிகளும் ஆதரவாளர்களும் பொது மக்களும் நினைவு கூரப்பட்டு கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையிலேஇ அந்த தானை தலைவன் கொல்லப்பபட்ட அதே இடத்திலே இன்று யாழ். மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை நடத்தினார்கள்.

இன்றைய தினம் ஆறாம் திகதி மே மாதம் 2020 ஆம் ஆண்டில் மாலை ஐந்து மணியளவில் மலர் மாலை அணிவித்துஇ மலர் தூவிஇ ஈகை சுடரேற்றிஇ அக வணக்கம் செலுத்தி இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன் பொழுது யாழ். மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்களும்இ யாழ் மாவட்டத்தினுடைய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளரும் கோப்பாய் பிரதேச சபை தவிசாளருமாகிய திரு. நிரோஜன் அவர்களும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய திரு. சபா குகதாஸ் அவர்களும் யாழ்ப்பாண மாநகர சபை துணை நகரபிதா திரு. ஈசன் அவர்களும்
நல்லூர் பிரதேச சபையினுடைய பிரதி தவிசாளர் திரு. ஜெயகரன் அவர்களும் நல்லூர் பிரதேச சபையினுடைய உறுப்பினர் திரு. மதுசூதன் அவர்களும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர் திரு. விந்தன் கனகரத்தினம் அவர்களும் கோப்பாய் பிரதேச சபையினுடைய உறுப்பினர் திரு. நிர்மலானந்தன் அவர்களும் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் செல்வி வேணுகா அவர்களும்
யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் திருமதி. நளினா பிரேம்லால் அவர்களும் யாழ்ப்பாண தொகுதி பொறுப்பாளர் திரு. உதயசிறி அவர்களும் சாவகச்சேரி தொகுதி பொறுப்பாளர் திரு. சூடாமணி அவர்களும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் திரு. கஜீதன் ஆகியோர் கலந்து கொண்டு அனங்கை ஒழுங்கையிலும் அதே நேரம்இ யாழ்மாவட்ட தலைமை காரியாலத்திலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நடத்தி சிறப்பாக தங்களுடைய மறைந்த தலைவருக்கும் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அஞ்சலி செலுத்தி கௌரவித்தனர்.

வழக்கமாக நூற்றுக் கணக்கான மக்களும் உறுப்பினர்களும் ஒன்று திரண்டு நிறைவேற்றி வைக்கின்ற இந்த நிகழ்விலே இந்த வருடம்இ கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட சுகாதார ஊரடங்கு மற்றும் சுகாதார கட்டுப்பாடு காரணமாக ஒரு குறிப்பிட்டளவு உறுப்பினர்கள் மாத்திரமே கோப்பாய் போலீஸ் தலைமை அதிகாரிஇ ஆய்வாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகளினுடைய மேற்பார்வையின் கீழ் குறிப்பிட்ட சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய இனிதே நடந்தேறியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -