மலையகத்தில் கடும் மழை பல இடங்களில் மண்சரிவு அபாயம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டு பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது.தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
நேற்று (15) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹட்டன் காசல்ரி வீதியில் பழையகாடு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அப்பாதையூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.
தற்போது வீதியில் கிடந்த மண்ணை அகற்றியுள்ளதனால் போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.
நீரேந்தும் பகுதியகளுக்கு அதிக மழை வீழ்ச்சி கிடைப்பதன் காரணமாக காசல்ரி, கெனியோன், விமலசுரேந்திர, லக்பான பொல்பிட்டிய, நவலக்பான, மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்து வருகின்றன.
ஹட்டன் கொழும்பு ஹட்டன் நுவரெலியா விதியில் அடிக்கடி பெய்து வரும் மழையுடன் பனி மூட்டமும் நிலவுவதனால வளைவுகள் நிறைந்த இந்த இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயன்படுத்து போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் நுவரெலியா வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் சாரதிகள் அவதானமாக தமது வாகனங்களை அவதானமாக செலுத்துமாறும்.மண் மேடுகளுக்கு மற்றும் மண் திட்டக்களுக்கு சமீபமாக வாழ்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதிக மழை காணரமாக மலையக பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -