தொலைத்தொடர்பு கம்பம் உடைந்து வீழ்ந்தமையினால் அட்டன் நோட்டர்ன் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
பெய்துவரும் அடை மழையுடன் கூடிய காற்றினால் 18/05 அதிகாலை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி பகுதியில் வீதியோர மிருந்த தொலைத்தொடர்பு கம்பம் உடைந்து பிரதான வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.
இதனால் அட்டன்,ஒஸ்போன்நோட்டன், லக்ஷபான, பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுன் காசல்ரியிலிருந்து அட்டன் வரையிலும் கிளவட்டன் பகுதியிலிருந்து நோட்டன் பிரிட்ஜ் பகுதிக்கும் இரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது

உடைந்து வீழ்ந்த கம்பத்தை அகற்ற தொலைத்தொடர்பு நிலைய ஊழியர்கள் நவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -