வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு முன்னெடுப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ரு சில புரிதல்களில் இடம்பெற்ற குறைபாடுகள் காரணமாக வாகனேரி பிரதேசத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில கடும்போக்குவாதிகள் இதனை அறிந்து இதனை ஒரு இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு முன்னெடுப்புக்களை செய்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

இச்சூழ்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து இரு தரப்பையும் சந்தித்து பேசி ஒரு சமாதான நிலையினை உருவாக்கும் நோக்கத்தோடு முதல் கட்டமாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கிருபா, குளத்துமடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.பார்த்திபன், வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.காசினாதன் மற்றும் வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஓவியராஜா ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரை சந்தித்து கலந்துரையாடினேன்.

சந்திப்பின் போது இது இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை இதனை இனவாத சக்திகள் ஒரு இனரிதீயான பிரச்சினையாக மாற்றுவதற்கு வடிவமைக்கிறார்கள். நாம் அனைவரும் தெளிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அங்குள்ள மக்களிடம் வேண்டிக் கொண்டேன்.

மேலும் அம்மக்கள் குறித்த இப்பிரச்சினை இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்டதென்றும் இதனை இனப்பிரச்சினையாக காட்ட முற்படமாட்டோம் என்றும் தெளிவாக கூறியிருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -