சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட பரிந்துரைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வலுவான வேட்பாளர்கள் வெளியேறவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வெளியேறவுள்ள வேட்பாளர்களில் மூன்று முன்னாள் அமைச்சர்களும் மூன்று முன்னாள் எம்.பி.க்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஏற்பட்ட விரக்தி மற்றும் தேர்தல் வெற்றி குறித்து நிச்சயமற்ற தன்மையினால் பணத்தைச் செலவழிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என நினைத்து, அவர்கள் இந்த முடிவை எடுக்க உள்ளனர் என அந்த தகவல்கள் தெரிவித்தன.
ஏற்கனவே சஜித் அணியிலிருந்து மூவர் வெளியேறி சென்றுள்ளமையும் முன்னாள் நிதியமைச்சரான மங்கள சமரவீர தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -