ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி 11 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிங்கோரா தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் கலைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளன.இந்த தாக்குதலினால் 6 ஆண்களும் 5 பெண்களும் பாதிப்புக்குள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குளவித்தாக்குதலுக்கு இலக்கான கர்ப்பிணித்தாயொருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.