வடி சாராயம் விற்பனை செய்து வந்த நபயொருக்கு 1,25000 ரூபா தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறைதண்டனை

எப்.முபாரக்-

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வடி சாராயம் விற்பனை செய்து வந்த நபயொருக்கு 1,25000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(29) உத்தரவிட்டார்.

கிளிவெட்டி,பாரதிபுரம்,மூதூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கங்குவேலி,முதளைமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நிலையிலே சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு பரல் வடிசாராயம் பரலும்,ஒரு பரல் கோடா பொருளையும் கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -