கொவிட் 19 பரவலை தடுக்க வழிகாட்டல் கையேடு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
சுகாதார அமைச்சின் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் FHB/SHU/COVID/2020 ஆம் இலக்க கொவிட் 19 தொற்றின் பரவலை தடுப்பதற்கு பாடசாலை வளாகத்தில் இருக்க வேண்டிய தயார்நிலை தொடர்பான வழிகாட்டலுக்கு இணைவாக சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது மாணவ சமூகத்தை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து, வைரஸ் பரவலை தடுப்பதற்கு பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை தயார்படுத்துவதற்கான சுற்று நிருபம் மற்றும் வழிகாட்டல் கையேடு இவ்வாறு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் 29 பக்கங்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த கையேட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் படங்களுடன் காட்சிப்படுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளன.
குறித்த வழிகாட்டல் கையேட்டினை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகம் அதன் பிரிவிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -