"கொவிட் 19" ஞாபகார்த்தமாக அல்மர்ஜானில் விவசாயத்தோட்டம்!


காரைதீவு நிருபர் சகா-
லகை புரட்டிப்போட்ட "கொவிட்19" ஞாபகார்த்தமாக பலநாடுகளும் பல நிறுவனங்களும் பலரும் பலகோணங்களில் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றன.

"கொவிட் 19 "தாக்கம் இன்னும் முற்றுமுழுதாக எமைவிட்டு நீங்கிவிடாத இன்றைய சந்தர்ப்பத்தில் சம்மாந்துறையில் ஒரு பாடசாலை சற்று வித்தியாசமான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

ஆம் சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் தேசியபாடசாலை "கொவிட்19 " ஞாபகார்த்தமாக ஒரு விவசாயத்தோட்டமொன்றை அமைத்துள்ளது.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் விஜயம்செய்து அத்தோட்டத்தைப் பார்வையிட்டார். பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அமீர் உள்ளிட்ட கல்விஅதிகாரிகளும் அதன்போது கலந்துகொண்டனர்.

கல்லூரி அதிபர் எச்.எம்.அன்வர்அலி பணிப்பாளர் நஜீம் தலைமையிலான கல்விஅதிகாரிகள் குழுவினரை வரவேற்று தோட்டத்தைக்காண்பித்தார்.

அத்தோட்டத்தில் கத்தரி வெண்டி போன்ற பயர்கள் பயிரிடப்பட்டிருந்தன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -