இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கணபதி கனகராஜ் தெரிவிப்பு
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- தற்போது நாட்டின் ஜனாதிபதி கௌரவ கோட்டபாய ராஜபக்ச அவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணிகளை அமைத்து வருகிறார்.அந்த வகையில் மலையக மக்கள் கடந்த 200 வருட காலமாக இந்த நாட்டுக்காக உழைத்து பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.ஆகவே இந்த 5 ஆண்டு காலப்பகுதியில் அவர்களது பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து தீர்வுகாணப்பட வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
இன்று 16.06.2020 பொகவந்தலாவை பகுதியில் ஒழுங்கு செய்திருந்த விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்;து தெரிவிக்கையில் இன்று மலையகப்பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அதாவது மத்திய சப்ரகமுவ , ஊவா மாகாணங்களில் பெரும்பாலானோர். தோட்டத்தொழிலாளர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் காணி, வீடு, தொழில், கல்வி, சுகாதாரம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர்.காலம் காலமாக ஆட்சிக்கு வந்த எந்தவவொரு அரசாங்கமும் இவர்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்து வைக்கவில்லை. ஆகவே ஐந்து வருட காலப்பகுதியில் மலையக மக்களின் அனைத்து வகையான பிரச்சினைகளும் தீரும் வகையில் ஜனாதிபதி நேரடி கண்காணிப்பில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும்.இந்த அரசாங்கம் வந்த பின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது அவற்றினை செய்து வருகிறது.அந்த வகையில் அட்டன் நோர்வூட் ,மஸ்கெலியா ,பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு செல்லும். பல பாதைகள் குன்றும் குழியுமாக மனிதர்கள் நடந்து கூட செல்லமுடியாத அளவுக்கு உள்ளன குறிப்பாக புளியாவத்தை வழியாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு வருகின்ற நியூட்டன் பாதை உட்பட 18 பாதைகளுக்கு தற்போது ஜனாதிபதி அவர்கள் காபட் இட்டு புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார.; அதற்காக அவருக்கு நன்றியினை தெரிவிக்கின்றோம். அத்தோடு இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படவுள்ளன. அவற்றை ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்