திருகோணமலை மாவட்டத்தில் 2,88,868 பேர் வாக்களிக்க தகுதி.


எப்.முபாரக்-

திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 2019 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 868 பேர் (2,88,868) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதன் பிரகாரம் மூதூர் தேர்தல் தொகுதியிலிருந்து 110,891வாக்காளர்களும் திருகோணமலை தேர்தல் தொகுதியிலிருந்து 97,065 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியிருந்து 80,912 வாக்காளர்களும் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பதின்மூன்று உள்ளூராட்சி சபைகளையும் கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது சேருவில தேர்தல் தொகுதியில் 75,375 பேரும்,திருகோணமலை தேர்தல் தொகுதியில் தொகுதியிலிருந்து 89,547 பேரும், மூதூர் தேர்தல் தொகுதியிலிருந்து 99,446 பேரும் என மொத்தமாக இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து 68 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில் இம்முறை மாவட்டத்தின் வாக்காளர் தொகை 24,500 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -