யாழ் நூலக எரிப்பும் தமிழ் பேசும் மக்களின் உள்ளக் குமுறலும். இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் கல்விக்கு விடுக்கப்பட்ட துரோகத்தனத்திற்கு நேற்றுடன் சுமார் 39 வருடங்கள் பூர்த்தி


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லங்கையில் ஏற்பட்டிருந்தன இன விரிசல் நிலைமைகள் காரணமாக 30 வருடங்களாக ஏற்பட்டிருந்தன யுத்த வடுக்களின் பிரதிபலிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகம் எரிக்கப்பட்ட விடயமாகும். இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய வடுக்களாகவே அது பதிவாகியுள்ளது.
ஒரு மனிதனின் வாழ்வியல் முற்றிலும் அவனது கல்வியின் அடிப்படையிலேயே அமைகின்றது. இந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது கல்வி என்பதனை எவரும் மறுக்கவோ அல்லது மறந்துவிடவோ முடியாது. ஆனால் பேரினவாதம் என்ற கர்வம் சிறுபான்மை மக்களின் கல்வியை அவர்களின் கண்களுக்கு மறைத்து அவர்களின் பழி வாங்கும் மனப்பாங்கு சிறுபான்மை மக்களின் கல்வியின் மூல வேரையே அறுத்த சம்பவமாக அது காணப்படுகின்றது. 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி விடிகாலையில் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பாரிய அதிர்ச்சியையும், இடியையும் ஏற்படுத்தியிருந்த கறுப்பு நாளாகவே அது அமைந்தது.
உண்மையில் மனிதாபிமானம் சாகடிக்கப்பட்டு இன ஒற்றுமை கிளித்தெறியப்பட்டு சட்டத்தை மீறி காட்டுமிறாண்டித்தனமாக மேற்கொள்ளப்பட்ட இந்த விடயம் கல்வியின்பால் ஆர்வமுள்ள சகலரதும் மனங்களில் ஆறாதா வடுக்களாகவே யாழ் நூல எரிப்பு இன்றும் பதிவாயியுள்ளது.
தமிழ் மொழி பேசும் மக்களின் மிகவும் முக்கியமானதொரு நூலகமாக வடமாகாண மக்களுக்கு மட்டுமன்றி இந்த நாட்டு மக்கள் அணைவருக்கும் அது ஒரு பொக்கிசமாகவே மிளிர்ந்;தது. இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் வரலாறுகள் கொண்ட நூல்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்விமான்கள், புத்தி ஜூவிகளின் பல ஆக்கபூர்வமான உண்மையான தொகுப்புக்கள், வரலாறுகள், ஆதரங்கள் அடங்கிய இலங்கையின் வரலாற்றை சான்றுப்படுத்தும் பல நூல்களும், ஆவணத் தொகுப்புக்களும் குவிக்கப்பட்ட ஒரு பொக்கிசத்தை எந்தவித மனச் சஞ்சலமும் இன்றி எரிக்கப்பட்ட விடயம் என்பது எவராலும் மண்ணிக்முடியாத பாரிய குற்றமாகும்.
சுமார் 97 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரலாற்றுப் பொக்கிசங்கள் ஒரே இரவில் திட்டமிட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டது. இந்த பொக்கிசங்கள் அழிக்கப்பட்ட விடயம் கேட்ட ஒரு அருட் தந்தைகூட ஏக்கத்தில் உயிர் நீத்த சம்பவம் மனிதனுக்கு கல்வி எந்தளவு முக்கியத்துவம் என்பதனை சொல்லித் தெரியத் தேவையில்லை. இவர் போன்று பல ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் உள்ளங்கள் அதனை நினைத்து பட்ட வேதனைகளும், துன்பங்களும் சொல்லிடங்காது. இன்றும் அதன் தாக்கம் பலருக்கு பேரதிச்சியாகவே இருக்கின்றது.
மனிதன் மனிதனுக்குள் சண்டை பிடித்துக் கொள்ளலாம். பின்னர் அவர்கள் ஒன்று சேரலாம் ஆனால் எழுத்துருவில் என்றுமே எடுத்துக் கொள்ள முடியாத வரலாற்றுப் பொக்கிசங்கள் மீது மனித தனது கர்வத்தை காட்டி அழிப்பது என்பது பாரதூரமான பாவச் செயல் மட்டுமல்லாது மண்ணிக்க முடியாத தண்டனைக்குரிய குற்றமுமாகும்.
எனவே இனியும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதிருக்க நாம் அணைவரும் பிரார்த்திப்போம். (எரியூட்டப்பட்ட பின்னர் மீள் கட்டுமானத்தின் தற்போதைய யாழ் நுலக கட்டிடம்.)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -