அஸ்ரப் ஏ சமத்-
அம்பாறை மாவட்டத்தில் அக்கைரைப்பற்று பிரதேச செயலாளா் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலையில் முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் அவா்களின் முயற்சியில் சவுதி அரசின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சவுதி அரேபிய சுனாமி வீடமைப்புத் திட்டம் இதுவரை உரிய முஸ்லிம் மக்களுக்கு பகிா்ந்தளிக்கப்படவிலலை.
இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.
பெரும்பான்மையான முஸ்லிம்களை வாக்குகளை பெற்ற எந்த ஒரு முஸ்லிம் தலைவரினாலும் இந்த வீட்டினை சுனாமியினால் பாதிக்க்பபட்ட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க அவா்களால் முடியவில்லை அதற்கான நடவடிக்கைகளைக் கூட இவா்களினால் எடுக்கமுடியவில்லை.
இக் கைங்கரியத்தை செய்வதற்கான தலைமைத்துவ திராணியும் அவா்களிடம் இல்லை.
இவ் வீடமைப்புத்திட்டத்தில் 500 வீடுகள் , பாடசாலை , சந்தை ,சனசமுக நிலையம் , வைத்தியசாலை, பள்ளிவாசல் என 50 ஏக்கா் அரச காணியில் இலங்கையில் எங்கும் இது போன்ற ஒரு திட்டம் இல்லாதவாறு இத் திட்டம் நிர்மாணிக்க்பட்டது.
இவ் வீடமைப்புத்திட்டத்தில் 500 வீடுகள் , பாடசாலை , சந்தை ,சனசமுக நிலையம் , வைத்தியசாலை, பள்ளிவாசல் என 50 ஏக்கா் அரச காணியில் இலங்கையில் எங்கும் இது போன்ற ஒரு திட்டம் இல்லாதவாறு இத் திட்டம் நிர்மாணிக்க்பட்டது.
கடந்த வருடம் ஊடக பணிக்காக அங்கு நானும் சா்ஜன் அபுபக்கரும் அங்கு சென்று இத் திட்டங்கள் பாா்வையிட்டபோது எங்களது மனம் பெரிதும் சஸ்சலித்தது. இவ் வீடுகள் பாழடைந்து வீடுகளும் சேதமாகி காணப்பட்டன.
சில வீடுகள் கட்டடிங்கள் கதவு யன்னல்கள் அகற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சில வீடுகளில் விலங்குகள் பாம்புகள் குடி வாழும் இடமாக காட்சியளிக்கின்றன. பற்றைகள் வளா்ந்துள்ளன. இதனை ஊடகங்களுக்கும் நாங்கள் அவ்வப்போது வெளிக்கெணா்ந்தோம்.
அத்துடன் சிங்கள ஊடகங்களும் இதனை வெளிக்கெணா்ந்தன.
கடந்த கால ஆட்சியில் 5 வருடத்தில் பதவியில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அம்பாறை அரச அதிபா் உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்திருந்தும் அதனை ஒரு இழுத்தடிப்பாகவே இருந்தது. இருந்தும் முஸ்லிம் கட்சித் தலைவா்கள் கபினட் அமைச்சர்களாக 5 பேர் இருந்தும் மிகவும் அந்னியோண்னியமாக பழகிய .
முன்னாள் பிரதமா் ரணிலிடம் இத்திட்டப் பிரச்சினை எததிவைத்தும் அங்கு அம்பாறை அபிவிருத்திக் குழுத் தலைவராக பதவி வகித்த முன்னாள் அமைச்சா் தயா கமகே இதனை தடுத்தரா? இதில் முஸ்லிம்கள் குடியேறி வாழ்வதனை தயா கமகே தடுப்பதில் அக்கரை காட்டிவந்தாரா?
தெரியவில்லை. இவ் வீடமைப்புத்திட்டத்தினை முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் நிர்மாணிக்கும் காலத்தில் சிகல உருமைய அரசியல் கட்சியாக இருந்த காலத்தில் தான் முன்னாள் அமைச்சா் சம்பிக்க ரணவக்க, அத்துரலியத் ரத்தினத் தேரோா்கள் உயா் நீதிமன்றில் இத் திட்டத்தினை முஸ்லிகளுக்கு மட்டும் வழங்கக் கூடாது என அன்று வழக்கு தாக்குதல் செய்தாா்கள் தீர்ப்பு வழங்கி 8 வருடங்கள் ஆகிவிட்டன.
ஆகக் குறைந்தது முஸ்லிம் சிங்களவா்கள் தமிழ் மூவின சமுகத்தினருக்குமாவதுஅம்பாறை மாவட்ட சனத்தொகைக்கேற்ப பங்கிட்டிருந்தாலும் 250 வீடுகளாவது முஸ்லிம் குடும்பங்களுக்கு கிடைத்திருக்கும். எவராவது ஏழை எளியவர்கள் எவருக்கேனும் பகிா்ந்தளித்திருக்காலம்.
இத் திட்டத்திற்காக சவுதி அரேபியாவின் சேக் மாா்கள் ஒவ்வொரு றியால்களாக சோ்த்த அவா்களது சக்காத் .
பணம் வழங்கியவா்களுக்காவது அந்த நன்மைபோய்ச் சேரவில்லை. - அவா்கள் நினைத்திருக்க கூடும் எமது நிதியினால் அனா்த்தினால் அல்லுரப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதாக அவா்கள் நினைத்திருக்கக் கூடும்