அனைத்திலங்கை பாடசாலை விளையாட்டுப்போட்டி நிறுத்தம்! இரண்டாம் தவணை யூலை6-செப்04:மூன்றாம்தவணைஅக்5-நவ27.


காரைதீவு நிருபர் சகா-
வ்வருடம் நடாத்தப்படவிருந்த அனைத்திலங்கை பாடசாலை விளையாட்டுப்போட்டி மேலும் பாடசாலை விளையாட்டுச்சங்கத்தினால் நடாத்தப்படவிருந்த மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் யாவும் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன என்று கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான சுற்றுநிருபமொன்றை அவர் நாட்டிலுள்ள சகல மாகாண கல்விச்செயலாளர்கள் கல்விப்பணிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் அனைவருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

அவரது சுற்றுநிருபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது:
உலகில் மிக அவசரகால நிலைமையாக வெளிப்படுத்தப்பட்ட கொவிட்19 பரவிய ஆபத்தை அடிப்படையாகவைத்து உடனடியாக செயற்படும்வண்ணாம் நாட்டிலுள்ள அரசபாடசாலைகள் அரசஅனுமதிபெற்ற தனியார் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து கல்விநிறுவனங்களும் 13.03.2020முதல் விடுமுறைதினமாக அறிவிக்கப்பட்டது.
அதன்காரணமாக நாட்டிலுள்ள 45லட்சம் மாணவர்களும் வீட்டிலிருந்து கல்விகற்க வேண்டியதாயிற்று. கொரோனாவிலிருந்து மாணவர்களைப்பாதுக்காத்த இந்நடைமுறை பலராலும் வரவேற்கப்பட்டது.
இன்று மீண்டும் சுகாதார நடைமுறைகளைப்பேணி பாடசாலைகளை திறக்க சுகாதாரத்துறையினர் அனுமதியோடு அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. என்றுள்ளது.
அதன்படி பாடசாலைகள் 4கட்டங்களாக முன்னெடுப்பது என்றும் நேரமாற்றங்கள் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகின்றபோதிலும் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மாறாக யூலை 6ஆம் திகதியே உயர்தர சாதாரணதர மற்றும் தரம்5 மாணவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை யூலை6 ஆம் திகதி தொடக்கம் செபடம்பர்04ஆம் திகதி வரை நடைபெறும். அதேவேளை மூன்றாம்தவணை அக்டோபர் 5ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 27ஆம் திகதி வரை நடைபெறும்.

இரண்டாம் தவணைக்குள் தவணைப்பரீட்சைகளை வைக்க ஏற்பாடுசெய்யக்கூடாது. எனினும் பாடசாலைமைய கணிப்பீடு செய்றபாடுகளுக்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளலாம்.
பாடசாலை இடைவேளை அனைத்து மாணவர்களுக்கும் ஒரேவேளையில் வரக்கூடாதவகையில் திட்டமிடப்படவேண்டும்.

பாடசாலையில் பொதுக்கூட்டங்கள் வைபவங்கள் ஒன்றுகூடல்கள் மறுஅறிவித்தல்வரை நடாத்தப்படக்கூடாது. மேலும் பாடசாலை கன்ரீன் விளையாட்டறை சாரணீயஅறை கடேற்அறை உள்ளிட்ட புறக்கிருத்திய செயற்பாட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கவேண்டும்.
ஒரு வகுப்பறையில் 25மாணவர்க்கும் குறைவான தொகையினரையே கற்ற்லகற்பித்தல் செய்றபாட்டிற்காக பயன்படுத்தப்படவேணடும். பாடசாலையிலுள்ள பொதுமண்டபம் தொடக்கம் சகல மண்டபங்களையும் கற்றல்கற்பித்தல் செயற்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

இவ்வாறான பல அறிவுறுத்தல்கள் அந்தச்சுற்றுநிருபத்தில் கூட்டிக்காட்;டப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -