எம்.ஏ.முகமட்-
கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (சா.த) பரீட்சையில் கிண்ணியா பிரதேசத்தில் 9ஏ சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் (நேற்று) வியாழக்கிழமை மாலை கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தலைமையில் 'ஊக்குவிப்போம் உயர்வடைவோம்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பளர் எம்.கே.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.முகம்மது முஸ்இல், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.அனிபா, கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி நாதிரா அமீன் ஆகியோர் என அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இந்தப் பரீட்சைப் பெறுபேற்றின்படி கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இருந்து 10 பேரும், கிண்ணியா மத்திய கல்லூரியில் இருந்து 2 பேருமாக 12 பேர் 9ஏ சித்தி பெற்றிருந்தனர்.
இவர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் உரிய மாணவர்களோடு அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.