ஜனாதிபதியின் எண்ணக்கருவில் கிராமத்துக்கு ஒரு வீடு கையளிக்கும் நிகழ்வு..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-   

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின்நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சமான நோக்கு என்னும் தொனிப்பொருளில் கிராமத்துக்கு ஒரு வீடுஎனும் திட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கட்டப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ளமாஞ்சோலை கிராமத்தில் கட்டப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர்திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அத்தோடு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனைகிராமத்தில் கட்டப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், ஓட்டமாவடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் திருமதி.எம்.சி.றம்ஷா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்பஉத்தியோகத்தர்களான எஸ்.எல்.நளீர், ரி.டிரோசன், உதவி பொறியிலாளர்எஸ்.தேவேந்திரன், கிராம சேவை அதிகாரிகள், செயலக உத்தியோகத்தர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடு நிர்மாணிக்கும்பணிக்கு மானியமாக வழங்கி வைக்கப்பட்ட ஆறு இலட்சம் ரூபாய் நிதியுடன், வீட்டின்பயனாளிகளின் மூன்றரை இலட்சம் ரூபாவுடன் சேர்ந்து வீடு கட்டி முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஓட்டமாவடி பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.எல்.நளீர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -