ஏ.எல்.எம்.ஷினாஸ் -
வழமையான ஐவேளை மற்றும் ஜும்ஆ கூட்டுத் தொழுகைகள் உள்ளிட்ட விசேட கூட்டுத் தொழுகைகளுக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதியை அடுத்து, இன்று (13) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த அனுமதி வழங்கப்படுவதாக, இலங்கை வக்ப் சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
இதனையடுத்து மருதமுனை - பெரியநீலாவணை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசலில் சமூக இடைவெளி பேணப்பட்டு சுகாதார நடைமுறைகளுடன் ஜமாஆத்தாக தொழுகை நடாத்தப்பட்டது.
அத்துடன், ஏற்கனவே இது தொடர்பில் வக்ப் சபையினால் வெளியிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பேணுவது கட்டாயம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
சுமார் 3 மாதங்களின் பின்னர் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்றும் தொழுகைகள் இன்று (13) முதல் இடம்பெறுகின்றன.
நேற்று (12) முதல் அனைத்து மத தலங்களையும் வழிபாட்டிற்காக திறக்க அனமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.