மட்டக்களப்பு மாவட்டத்தின் முகத்துவாரத்தை வெட்டி நீரை ஓட விடுவதன் ஊடாக ஒருசில மணி நேரத்துக்குள் எமது வெள்ள நீர் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தர முடியும் எனத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இந்தப் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சேனைக்குடியிருப்பு மணல்சேனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு மருதமுனை சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு நிந்தவூர் சம்மாந்துறை நாவிதன்வெளி உள்ளிட்ட பகுதியிலுள்ள சுமார் 13 கண்டங்களிலுக்கும் அதிகமுள்ள வயல் நிலங்களில் நீர் வழிந்தோட முடியாத நிலையில் நீர் தேங்கிக் காணப்படுகின்றன.
இதனால் 5இ000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற் காணிகளில் அறுவடைசெய்ய முடியாத துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.ஏலவே வெள்ள நீர் ஏற்படுவதற்கு முன்னர் சில விவசாயிகள் வயல் அறுவடைகளை செய்தும் உள்ளனர்.
மேலும் கல்முனைக் கண்டம் இ நற்பிட்டிமுனை கீழ்-மேல் கண்டம்இ ஏத்தாளை நீண்டகரைஇ பண்டித்தீவுஇ சேவகப்பற்றுஇ மண்டூர் எல்லை போன்ற கண்டங்களிலுள்ள வயல் காணிகளேஇ இவ்வாறு நீர் தேங்கி நின்றுஇ அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலை தொடருமாக இருந்தால் பல மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுமெனஇ விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
எனவே தாம் எதிர்நோக்கியுள்ள இந்தப்பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடித் தீர்வை பெற்றுத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் எதிரொலியாக மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீ லங்கா பெரமுனை கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட 2ஆம் இலக்க வேட்பாளர் கீர்த்தி ஸ்ரீ விஜயசிங்க உட்பட 33 பேர் கடந்த சனிக்கிழமை(27) இரவு கைதாகி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து நீரை வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டச் செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
இதற்கமைய இவ்விரு மாவட்ட செயலகத்திலும் இரு வேறு தினங்களில் விவசாய அமைப்புகள் பொது அமைப்புகள் உள்ளடங்கலாக அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டம் இடம்பெற்ற போதிலும் எதுவித முடிவுகளும் இதுவரை எடுக்கவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மழை வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்றுஇ நற்பிட்டிமுனைஇ கிட்டங்கிஇ நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கை நிலங்கள் முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் அதனை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.