சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து , அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் மறு அறிவித்தல் வரும் வரை, இரத்து செய்வதாக சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது
மேலும் தமது நாட்டு பிரஜைகளை அழைத்துவரும் சர்வதேச விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக ,சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் உள்நாட்டு விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை சவுதியில் தங்கியுள்ள வெளிநாட்டவர் சுகாதார நிபந்தனைகளை மீறினால் நாடு கடத்தப்படுவர் என சவுதி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.