சிறுபான்மை மக்களின் குறைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம். சுப்பையா சதாசிவம் தெரிவிப்பு.




ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -

க்கிய தேசிய கட்சி கடந்த நாலரை வருடங்களாக ஆட்சியில் இருந்தது அவர்கள் தேர்தலுக்கு முன் ஆயிரம் ரூபா தோட்டதொழிலாளர்களுக்கு தருவதாக தெரிவித்தார்கள் ஆனால் அவர்கள் வெற்றி பின் அவர்களால் 50 ரூபா கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை.இன்று சிறுபான்மை மக்களின் குறைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.

தேயிலை எம் தேசம் என்ற அமைப்பினர் வேட்பாளர் சதாசிவம் அவர்களுக்கும் பொது பெரமுனவிற்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்து ஒழுங்கு செய்திருந்த ஊடக சந்திப்பு இனறு (12); நடைபெற்றது. அதில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று நுவரெலியா மாவட்ட மக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் ஆதரவளிக்க தீர்மானித்து விட்டனர் கடந்த ஆட்சியில் மக்களை ஏமாற்றியவர்களை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளதனாலும் அரசாங்கம் ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க முடிவு செய்துள்ளதனாலும் மக்கள் இம்முறை நிச்சயமாக பொது ஜன பெரமுணவினை ஆதரித்து நுவரெலியா மாவட்டத்தில் அதிகபடியான வாக்குகளால் வெற்றி பெற தயாராக இருக்கிறார்கள்.

அதே நேரம் 1992 ஆண்டு கூட்டு ஒப்பந்தம் உருவாக்கியதிலிருந்து சம்பள அதிகரிப்பு முறையாக நடைபெற்ற அனுமற்றவர்கள் அதனை கையாண்டதன் காரணமாகத்தான் இன்று ஆயிரம் சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்த்திற்கு நாங்கள் 1000 சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க ஆழுத்தம' கொடுப்போம்.

நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் போது கூட நான் அன்று பெற்றுக்கொடுத்து கிரா சேவகர்கள் தான் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளார்கள் ஆனால் இன்று இருந்தவர்கள் அரச நியமனங்களை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக இன்று எமது இளைஞர்கள் வேலை இன்றி கொழும்பில் சென்று வேலை செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே மக்கள் அனுபமுள்ளவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

இன்று நுவரெலியா மாவட்டத்தில் அதிக படியானவர்கள் வாக்குகளை சிதரடிக்க போட்டியிடுகிறார்கள் அதனால் மக்கள் யாரை அனுப்பினால் மக்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்பதனை உணர்ந்து மக்களின் பிரச்சினைகளை எந்த முறையில் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து தீர்;ப்பார்களோ? 

அதற்கு ஏற்ற வகையில் தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.அதே நேரம் இன்று தேயிலை என்ற அமைப்பில் சகலமதத்தவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் இன்று எனக்கு ஆதவளிக்கு முன்வந்துள்ளார்கள் ஆகவே இந்த தேர்தலில் மொட்டு சின்னம் நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றிபெரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -