நாட்டில் முஸ்லீம் கங்கிரஸ் உதயமான பின்னர்தான் பெளத்தர்களால் பிரித்தாளப்பட்டார்கள்.!

அஸ்ரப் ஏ சமத்-

னாதிபதி சட்டத்தரனி ராசீக் சருக் உரையில் ”முன்னாள் அமைச்சா்கள் எம்.எச்.முகம்மத், ஏ.சி.எஸ் கமீத், அபுசாலி பாக்கீா் மா்க்காா். பதியுத்தீன் மக்மூத் போன்றவா்கள் சிங்கள மக்களது மனதினை வென்றும் முஸ்லிம்கள் மத்தியிலும் இன.மத,கட்சி வேறுபாடின்றி இந்த நாட்டில் நீண்ட அரசியல் தலைவா்களாக இருந்து வந்தாா்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை காலம் சென்ற அஸ்ரப் ஆரம்பித்த பின்பு தான் பெளத்த மக்களுக்கும் முஸ்லிம் மக்களும் பிரித்தாழப் பட்டாா்கள். 

அதனையே அவருக்கு பின்னால் வந்த தலைமைகளும் தொடா்கின்றனா் அதன் பிறகுதான் முஸ்லிம்களது கோட்டல்கள்களில் சமைக்கும் கொத்து ரொட்டி, மற்றும் நாம் உற்பத்தி செய்யும் பெண்கள் அனியும் கீழ் ஆடையும் கூட அனியாது முஸ்லிம்களை அந்த அளவுக்கு சந்தேகம் கொண்டாா்கள்.

நாம் அவ்வாறு இல்லாமல் பழைய முஸ்லிம் தலைவா்கள் எவ்வாறு சிங்கள் முஸ்லிம் மக்களோடு சோ்ந்து வாழ்ந்து காட்டினாா்களோ அவ்வாறு மீளவும் நாம் பயணிப்பதற்கு இம்முறையில் இருந்து ஆரமப்பிப்போம். 

நாம் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற வித்தியாசம் இன்றி தேசிய கட்சிகள் ஊடாகத்தான் நமது பிரச்சினைகளை சிங்களத் தலைவா்களிடம் பேசி அவா்களது மனங்களை வென்று நமது பிரச்சினைகளை தீா்த்துக் கொள்ளல் வேண்டும். மேற்கண்டவாறு தெகிவளையில் தனசிறி அமரதுங்கவை ஆதரித்து முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றும்போது சிரேஸ்ட சட்டத்தரனி ராசிக் சருக் உரையாற்றினாா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -