கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் பெருகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரப் பகுதியில் டெங்கு நோயாளர்கள் பலர் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அப்பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.கே. ஜௌபர் தெரிவித்தார்.
குறித்த டெங்கு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் ஒன்று (28) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தில் கழக உறுப்பினர்கள் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை பிரதித் தவிசாளர் யூ.எல்.அஹமட் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.கே.ஜௌபர், யூ.எல்.எம்.ஜின்னா, ஏ.எம்.எம். அனீஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
டெங்கு நோய் பெருகும் காலகட்டத்தில் எமது கழகம் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கழகத்தின் தலைவர் ஏ.எல்.நவாஸ் (ஆசிரியர்) தெரிவித்தார்.

இதில் இணைந்து கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று டெங்கு பெருகும் பொருட்களை அழித்து அப்புறப்படுத்தினர். அத்தோடு டெங்கு பெருகும் சூழல் காணப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.