இசங்கனிச்சீமையில் "திக்கி மரைக்கார் பாதை" கொங்ரீட் பாதையாக உதயம்.



நூருள் ஹுதா உமர்-
க்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கனிச்சீமை இரண்டில் இன்று ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்தின் கீழ் கொங்ரீட் புதிய பாதை அமைக்கப்பட்டது.

இசங்கனிச்சீமை கிராமம் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவர்களில் திக்கி மரைக்காரும் ஒருவர் என்ற அடிப்படையில் அவருடைய நாமத்தில் "திக்கி மரைக்கார் பாதை" என்று பெயரிடப்பட்டு அந்தப் பாதை இன்று கொங்ரீட் பாதையாக மாற்றம் பெற்றுள்ளது என அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம். ஐய்யுப் தெரிவித்தார்.

மேலும், இந்த கிராமத்தின் பாடசாலைக்குரிய நிலத்தை வழங்கி இக்கிராமத்தை உயிரோட்டமாக ஆக்கியவர்களின் இவரும் ஒருவர் எனவே எமது மண்ணில் கௌரவம் அளிக்கக்கூடிய மரணித்தவர்களின் இப்பட்டியலில் இவரும் முதன்மை பெற்றவராக என்றும் திகழ்வார் அதனாலையே அவரை கௌரவப்படுத்தி இவ்வீதிக்கு அவரின் பெயரை சூட்டியுள்ளோம் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -