மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின், பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.வாஸ்தீன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
மிக நீண்ட கால முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளியான இவரிடம் இது பற்றி கருத்து வினவியபோது,
"நாட்டின் சமகால அரசியல் சூழ் நிலையினை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் ஆளுமை மிக்க பலமான அரசியல் தலைமை ஒருவரை ஆதரிப்பது என, தீர்மானத்தை மேற்கொண்டதற்கமைவாக,
இன்று (30) கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் தனது இல்லத்தில் வைத்து தமது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டதாகவும், ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியினை உறுதி செய்து கொள்ள பூரண ஆதரவை வழங்குவதேதமது உறுதியான நோக்கம் " எனவும் கருத்து தெரிவித்தார்.