சுகாதார உபகரணங்கள் பங்கிடல் நிகழ்வு !


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொவிட் 19 க்கு எதிராக அரசாங்கத்தினாலும், பல்வேறுபட்ட நிறுவனங்களாலும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தருணத்தில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா நிறுவனத்தின் பங்களிப்பாக “கொவிட்-19 வைரசுக்கு எதிரான போராட்டம்”என்ற தொணிப் பொருளின் கீழ் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா நிறுவனத்தின் சமுக சேவைப்பிரிவினால் மத்திய கொழும்புப் பிரதேசத்தில் உள்ள மாளிகாவத்தைப் பகுதியில் உள்ள விகாரைகள், தேவாலயங்கள், இந்துக் கோவில்கள், பள்ளிவாசல்கள், வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் கொழும்பு பிரதேசச் செயலகம் என்பனவற்றிற்கு வைரஸ் கிருமித் தொற்று சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (10) உலமா சபையின் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.
இதன்போது 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வின் முதற்கட்டம் உலமா சபையின் அங்கத்தவர்களினால் இன்று மாளிகாவத்தைப் பிரதேசத்தில் இடம் பெற்றது.
சமயத்தளங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி எஸ்.எல்.நௌபர் மற்றும் பொருலாளர் கலீல் மௌலவி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உலமா சபையின் இஞைர் அணியின் தலைவர் அர்க்கம் நூராமித், சமாதி தர்மாயத்தன விஹாரையின் விஹாராதிபதி தங்கல்லே சாரத தேரர், மாளிகாவத்தை இந்துக்கோவிலின் பிரதம குருக்கள் இரா நீதிராஜ குருக்கள், மாளிகாவத்தை வைத்தியவாலையின் பிரதான வைத்தியர் ருச்சிர சமனபால, வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தர் திருமதி மெனிக்கே, கொழும்பு பிரதேசச் செயலகத்தின் அதிகாரி அஜித் சமந்த குமார, மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரஜா பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.டபிள்யு.எம்.விஜகோன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதன்போது வருகை தந்த சமயத்தளங்கள், அரச வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையங்கள், பிரதேசச்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -