“மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் பெண்கள்” எனும் ஆய்வறிக்கை நூல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

காத்தான்குடி ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியமானது ( (IWARE) ) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் அங்கத்துவம் பெறும் பெண்களின் “மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் பெண்கள்” எனும் ஆய்வறிக்கை நூல் வெளியிட்டு விழா சனிக்கிழமை காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் நடைபெற்றது.

காத்தான்குடி ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றிய பணிப்பாளர் திருமதி.அனீஷா பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியிட்டு விழாவில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் திருமதி.ஜெம்குத் நிசா மசூத், காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச மட்ட சமூக ஆர்வளர்கள், மகளிர் ஒன்றிய பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கலந்து கொண்டவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் பெண்கள் எனும் ஆய்வறிக்கை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், ஆய்வறிக்கை நூல் தொடர்பிலான விளக்கவுரையும் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் அங்கத்துவம் வகிக்கின்ற பெண் உறுப்பினர்களை மையப்படுத்தி பெண்களின் பெண்களினது அனுபவத்தினை புரிந்து கொண்டு அவர்களது வினைத்திரனுடனான பங்களிப்பிற்கும், ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்கும் ஆதரவளிப்பதற்குமாக உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள பெண் அங்கத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் அடையாளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் பெண்கள்” எனும் ஆய்வறிக்கை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதாக காத்தான்குடி ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றிய பணிப்பாளர் திருமதி.அனீஷா பிர்தௌஸ் தெரித்தார்.

குறித்த ஆய்வறிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள பெண் அங்கத்தவர்களின் விபரங்கள், உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பும் பணிகளும், பெண்களின் அரசியல் அறிவும் ஆர்வமும் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள பெண்களுக்கான ஆதரவும் சவால்களும், இவற்றுக்கான சிபாரிசுகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -