நாட்டிலுள்ள சகல மதஸ்தலங்களை நிபந்தனைகளோடு அரசாங்கம்திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் பள்ளிவாயல்களில் லுகர் தொழுகை தனித் தனியாக இடம்பெற்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் மற்றும்கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளிவாயல்களில் லுகர் தொழுகையில்தனித் தனியாக ஈடுபட்டனர்.
இதன்போது அரசாங்கம் மற்றும் சுகாதார திணைக்களத்தினால்வழங்கப்பட்ட அறிவுறுத்தல்ளுக்கமைய தனிநபர் தொழுகைக்காக பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டுஒரே சமயத்தில் 50 பேருக்குகுறைவானோர் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டு தொழுகையும்இடம்பெற்றது.
அத்தோடு பள்ளிவாயலினுள் இருக்கின்ற போது ஒவ்வொருவரும் முகக்கவசத்தை அணிந்திந்ததோடு, ஒரு மீட்டர் சமூக இடைவெளியையும் பேணும் வகையில் இறைகடமையில் ஈடுபட்டதை காண முடிந்தது.
கூட்டுத் தொழுகைக்கோ, ஜும்ஆ தொழுகைக்கோ இதுவரை அனுமதிவழங்கப்படவில்லை. பள்ளிவாசல்களை திறப்பதற்கு முன்னர் கட்டாயம் அந்தந்த பிரதேச பொதுசுகாதார பரிசோதகரின் அனுமதியை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.