நுவரெலியாவில் மொட்டு மலரும் மக்கள் உறுதி


தலவாக்கலை பி.கேதீஸ்-
நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மொட்டு மலர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றி வாகை சூடும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

மலையகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் அமைந்தது. அதேபோல எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலும் அமையும். இந்த தேர்தலில் மலையக மக்களின் முழுமையான ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கும். மக்கள் இத்தேர்தலில் மிகுந்த பொறுப்புணர்;ச்சியோடு செயற்பட்டு வருவதை மக்களை நேரடியாக சந்திக்கும்போது நான் உணர்ந்தேன். கடந்த காலத்தில் மக்கள் விட்ட பிழையை சரி செய்துகொண்டு சரியான தேர்வான மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர். மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றனர். எனவே மலையக மக்களுக்கு சிறந்தவொரு எதிர்காலத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைத்துக் கொடுக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். மேலும் தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் என்றும் இல்லாதவாறு பல போட்டிகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை எமக்கு ஏற்ப்பட்டுள்ளதை மக்கள் அறிவார்கள். மக்கள் மத்தியில் குழப்பங்களையும் மோதல்களையும் ஏற்படுத்தி மக்களின் கட்டுக்கோப்பை திசை திருப்ப சிலர் முனைவார்கள். இதனால் மக்கள் மிக தெளிவாகவும் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்ப்பட்டுள்ளது.ஆகவே இத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து அவ்வெற்றிடத்திற்கு அவரின் புதல்வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்களித்து அவரை வெற்றிப் பெற செய்ய மலையக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து எம்மை அமோக வெற்றி பெறச் வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -