நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரொசல்ல சந்தியில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்
டெம்பஸ்டோ ஹைட்றியிலிருந்து அட்டன் நோக்கிவந்த சிட்டிரைடர் ரக பஸ் 06/06 பிற்பகல் 2.15 மணியளவில் விபத்துக்குள்ளனது.
டெம்பஸ்டோவிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த பஸ் ரொசல்ல சந்தியில் அட்டன் பிரதான வீதிக்குள்ள நுளைய முற்பட்ட போது சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பின்நோக்கி சென்று குடைசாந்துள்ளது
விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுப்பதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.