அசுத்தமான உணவுகளில் இருந்து உருவாகும் வயிற்றுப்போக்கு மற்றும் உயிர்கொல்லி நோயான புற்றுநோய் உட்பட 200 நோய்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுகளின் படி அசுத்தமான உணவை உட்கொள்வதால் உலகளாவிய ரீதியில் ஆண்டு ஒன்றுக்கு நான்கு இலட்சம் பேர் உயிரிழக்கின்றமை தெரியவந்துள்ளது.
அத்துடன் அசுத்தமான உணவுகள் காரணமாக உலகளாவிய ரீதியில் சுமார் 600 மில்லியன் மக்கள் நோய்ப் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியுள்ளது.
பல்வேறு உள்ளடக்கங்களை கொண்ட மாசுபடுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் ஆண்டு ஒன்றில் 10 இல் ஒருவர் நோய்வாய்ப்படுவதாகவும் அவர்களில் 40 வீதமானவர்கள் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் ஆபத்தான விடயம் என்னவொன்றால் நோய்வாய்ப்படும் குழந்தைகளில் 125,000 பேர் ஆண்டு ஒன்றில் உயிரிழக்கின்றனர்.
உணவு தயாரித்தல், பதப்படுத்துதல் மற்றும் விநியோகித்தல் செயற்பாடுகளில் முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உலக மக்கள் சனத்தொகையில் கணிசமான பகுதியினர் நோய் வாய்ப்பட்டு மரணிப்பதை தடுக்க முடியும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில் சுகாதார உணவுகளை வழங்குவதில் சவாலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், கோவிட் 19 போன்ற நோய் தொற்றுக்கள் பரவி வரும் தற்போதைய தருணத்தில் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு அனைவரினதும் பொறுப்பாகும் என்ற தொனிப்பொருளில் உலகளாவிய ரீதியில் கடந்த ஜுன் மாதம் 7ஆம் திகதி உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
இலங்கையில் கொரோனாவை தவிர்ப்போம் – உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உணவுத் தயாரிப்பு, உணவை கையாளுதல், களஞ்சியப்படுத்தல் அதேபோன்று உணவுகளை பரிமாறும் போது உணவுமூலம் ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு எனப்படுவது
பல சந்தர்ப்பங்களில் இலாப நோக்குடன் மேற்கொள்ளப்படும் பாரிய அளவான மக்களுக்கான உணவு வழங்குதல் உள்ளிட்ட பல காரணங்களால் உணவுப் பாதுகாப்பு தற்போது பல சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நுண்ணுயிர்கள், இராசாயனங்கள் மற்றும் கதிர்வீச்சுக்களால் உணவு மாசுபடுகின்றமை, உணவின் தரம் குறைவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக காணப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ.ரோஹண வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.