ஐ.எல்.எம் நாஸிம் -
கொரோனா வைரஸ் இனால் முழு நாடும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை சீரமைக்கும் வகையில் தற்போது அனைத்து பணிகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.அந்த அடிப்படையில் இன்னுன் சில தினங்களுக்குள் சம்மாந்துறை பிரதேச மதஸ்தலங்களும் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த மதஸ்தலங்கள் மற்றும் அவற்றை நெறிப்படுத்துகின்ற விதம் பற்றி சம்மாந்துறையில் உள்ள பள்ளிவாசல்கள்,கோயில்கள் போன்ற அனைத்து மதஸ்தலங்களுக்கும் சுகாதார பணியகத்தின் ஆலோசணைகளும் பணிப்புரைகளும் (12) சுகாதார பரிசோதர் பணிமனையினால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுகாதார அமைச்சின் சுற்று நிருபம் மற்றும் வக்பு சபையின் வேண்டுகோளில் மதஸ்தலங்கள் குறிப்பாக பள்ளி வாசல்கள் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன் நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம் கபீர்,சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர் ஐ.எல். றாஸிக்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சீ.bபீ.எம். ஹனீபா, எம். இலங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.