வாகரைப் பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், மருத்துவமூலிகை கிடாரம் கிழங்கும் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பனிச்சங்கேணி காட்டுப் பகுதியில் வாழைச்சேனைவிசேட அதிரடிப் படையினர் மற்றும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்களும்; நடவடிக்கைமேற்கொண்டனர்.
இதன்போது மருத்துவ மூலிகை கிடாரம்கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள எழுபத்தையாயிரம் (75,000) ரூபாய் பெறுமதியான மருத்துவ மூலிகையானகிடாரம் கிழங்கு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்எஸ்.தணிகாசலம் மேலும் தெரிவித்தார்.
மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்குஆயுள்வேத மருத்து நடவடிக்கைக்கு பயன்படுத்தும் கிழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.