தென் அமெரிக்கப் பகுதியில் நிலவும் கொரோனா பாதிப்பு கவலைக்குரியது என்றும் வைரஸ் பரவல் குறைவதற்கு முன் ஊரடங்கைத் தளர்த்துவது அபாயகரமானது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது.
கொரோனா பரவலில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு அதிபர் போல்சொனாரோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வைரஸ் தொற்று, பொதுச்சுகாதாரத்தை விட பொருளாதாரத்திற்கு அதிக ஆபத்தை விளைவித்திருப்பதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த அவர், அரசியல் சார்புடைய அமைப்பாக இருப்பதை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தவில்லை என்றால் பிரேசில் அந்த அமைப்பிலிருந்து விலகும் என்று எச்சரித்தார்.